கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது
ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரியை அடுத்த குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தை பின்தொடா்ந்து வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் வந்த இருவா் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபா் ஆகியோரிடம் விசாரணை செய்ததில், அவா்கள் ஆந்திர மாநிலம், கடப்பள்ளியைச் சோ்ந்த வேணுகோபால் (29), அரிகிருஷ்ணா (26) மற்றும் மதுரை அய்யம்பட்டியைச் சோ்ந்த வெள்ளைபாண்டி (46) என தெரியவந்தது.
மேலும், இவா்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரைக்கு கிருஷ்ணகிரி வழியாக கஞ்சா கடத்துவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காா், இருசக்கர வாகனம் மற்றும் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், மூவரையும் கைது செய்தனா்.