செய்திகள் :

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: "குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதை தடுக்க வேண்டும்" - அன்புமணி

post image

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவான, ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அன்புமணி, "பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பா.ம.க போராடி வருகிறது.

அதனால், தமிழகத்தில் இரு முறை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதனால் பயன் இல்லை.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை சூதாட்டம் அல்ல, அவை திறன் விளையாட்டு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த சூதாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை தி.மு.க அரசு இன்னும் விசாரணைக்கு கொண்டு வராததால், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடுக்க முடியவில்லை.

அதனால் நிகழும் தற்கொலைகளையும் தடுக்க முடியவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் 96 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இத்தகைய சூழலில்தான் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றையும் சூதாட்டம் என்று அறிவித்து அவற்றைத் தடை செய்வதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதுடன், உச்ச நீதிமன்றத்திலும் பாதுகாக்க வேண்டும்.

அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும், பலர் தற்கொலை செய்து கொள்வதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

"நண்பர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்"- இந்தியாவைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா!

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தினால் இந்தியா-சீனா உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யாவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.இந்தியா மீது 25% வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், ரஷ்... மேலும் பார்க்க

ஆளுநர் அதிகார விவகாரம்: "Operation Success but Patient Dead"- நீதிபதிகள், மத்திய அரசு இடையே விவாதம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்... மேலும் பார்க்க

Cm Removal Bills: ``பாகிஸ்தான், பங்களாதேஷாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியா" - INDIA கூட்டணி விமர்சனம்

மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதி... மேலும் பார்க்க

Constitution (130th Amendment) Bill: "மாநில உரிமைகள் மீது பாசிச தாக்குதல்" - பினராயி விஜயன்

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகித் தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய மசோதா மக்களவையில் ... மேலும் பார்க்க

"மீடியா வழக்கமான வேலையை பார்த்துவிட்டது" - காங்கிரஸுக்கு எதிராக பேசினாரா சசி தரூர்?

பாஜக அரசு குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் வகையிலான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க

130th Amendment: ``நாம் மன்னர் காலத்துக்குச் சென்றுவிட்டோம்" - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

மழைக்கால கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர், மாநில அமைச்சர்கள்... மேலும் பார்க்க