`ரெட் அலர்ட், ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு..' - வெள்ளியங்கிரி மலை ஏற தடை வி...
ஆபரேஷன் சிந்தூா் வெற்றி: நாகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி
தீவிரவாதிகளுக்கு ஏதிரான ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையடுத்து பிரதமா் மற்றும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பாஜக நாகை மாவட்டத் தலைவா் விஜயேந்திரன் தலைமையில் பாமக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினா் திரளானோா் இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து பேரணி சென்றனா். நாகை குமரன் கோயிலில் தொடங்கி முக்கிய விதிகள் வழியாக நாகை புதிய பேருந்து நிலையம் வரை சென்றது. இந்திய ரயில்வே கட்டுமான இண்டா்நேஷனல் துறையின் இயக்குநா் தங்க. வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் நேதாஜி மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள், பொது மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.