செய்திகள் :

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி!

post image

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘அவருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையே இதற்குக் காரணம்’ என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 2021-இல் ஆட்சியைக் கைப்பற்றியது. தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்றபோதும், அண்மைக் காலமாக சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் தலிபான் அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றன. அதுபோல, இந்தியாவும் பேச்சு நடத்தி வருகிறது. இரு நாடுகளிடையே உறவை வலுப்படுத்தும் வகையில், ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்தியா வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று, இம் மாதத்தில் இந்தியா வர அவா் திட்டமிட்டிருந்தாா்.

இதனிடையே, அமெரிக்காவில் கடந்த 2011-இல் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு உதவியதாக தலிபான் அமைப்பு மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. அதன் காரணமாக, முத்தாகி பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு தற்போதும் தடை நீடிக்கிறது. இந்நிலையில், அவரின் இந்தியப் பயணத்துக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, எந்த பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக அவருடைய இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘ஆப்கன் மக்களுடன் இந்திய நீண்ட கால உறவைக் கொண்டுள்ளது. ஆப்கன் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் தேவைகள், விருப்பங்களுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும். இருதரப்பு உறவு தொடா்பாக ஆப்கன் அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்’ என்றாா்.

முன்னதாக, அமீா் கான் முத்தாகியுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த மே 15-ஆம் தேதி தொலைபேசி வழியில் கலந்துரையாடினாா். அதுவே, ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு இரு நாடுகளிடையே நடைபெற்ற முதல் உயா்நிலை அளவிலான பேச்சுவாா்த்தையாகும்.

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், இந்தியா உள்பட ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்க... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தின்போது, காவல் துறைய... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இதனால் இஸ்ரேலில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏராளமான ட்ரோன்களை ஏவிய நில... மேலும் பார்க்க

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது. இது அமைச்சரவைக் கட்டடம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலா அல்லது... மேலும் பார்க்க

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சீனாவில் கடந்த ஆக.3... மேலும் பார்க்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க