செய்திகள் :

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு - ஐபோன் 16இ அறிமுகம்!

post image

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவாக ஐபோன் 16இ மாடல் அறிமுகமாகியுள்ளது.

‘ஆப்பிள் குடும்பத்துக்கு புதிய உறுப்பினர் ஒருவர் வருகை தருகிறார்’ என்று குறிப்பிட்டு, ஐபோன் 16இ மாடல் மீதான எதிர்பார்ப்பை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அதிகரிக்கச் செய்திருந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவான ஐபோன் 16இ புதன்கிழமை(பிப். 19) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் சந்தையை குறிவைத்து ஆப்பிள் களமிறக்கியிருக்கும் இந்த ஐபோன் மாடல், ஆப்பிள் விற்பனையை மேலும் விரிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கைகளில் பிடிப்பதற்கு ஏதுவாக, மிக மெல்லிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஐபோன் 14 மாடலை கண்முன் வந்துபோகச் செய்யும் டிசைன் என்றே சொல்லலாம்.

ஐபோன் 16 மாடல்களில் இருப்பதைப் போன்றே இதிலும் ஏ18 சிப் இந்த ஐபோனை மின்னல் வேகத்தில் இயங்கச் செய்கிறது.

ஆப்பிள் இண்டெலிஜன்ஸ்:ஆப்பிளின் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் அமைந்திருப்பது ஐபோன் 16இ மாடல் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஆப்பிளின் கடந்த மாடல்களான எஸ்இ ரகங்களில் இல்லாத மிகப்பெரும் மேம்பாடாக ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் இடம்பெற்றிருப்பது வாடிக்கையாளர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் என்ற எதிபார்ப்பும் நிலவுகிறது.

6.06 இன்ச் ஓ-எல்இடி தொடுதிரையுடன் வந்துள்ளது. என்னதான் ஸ்க்ரீன் சைஸ் அதன் முந்தைய மாடலான ஐபோன் 16-இல் வழங்கப்பட்டிருந்த 6.12 இன்ச் அளவைவிட சிறிதாயினும், ஒட்டுமொத்தமாக இரு போன்களும் ஒரே அளவை ஒத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், ஐபோன் 16-ஐ விட 0.1 மி.மீ. மெல்லியதாகவும், 0.7 மி.மீ உயரம் குறைவானதாகவும் இந்த புது மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேமரா : முன்பக்கத்தில் நாட்ச் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேமராக்கள் ஃபேஸ் அன்லாக் செய்வதை எளிமையாக்குகின்றன.

வழக்கமாக ஐபோன்களில் இருக்கும் ஹோம் ஸ்விட்ச் பட்டன் இந்த புது மாடலில் இல்லை. இதனால், தொடுதிரை மூலம் ஐபோனை அன்லாக் செய்வது மாற்றப்பட்டு முகத்தைக் காட்டி ஃபேஸ் அன்லாக் முறை மட்டுமே அமையப்பெற்றுள்ளது ஐபோன் 16இ.

பின்பக்கத்தில் ஒரேயொரு கேமரா மட்டும்தான். 48 மெகா பிக்சலுடன் உள்ள இந்த கேமரா, ஆப்பிளுக்கே உரிய பாணியில் போட்டோக்களை உயர் ரக க்ளாரிட்டியில் எடுத்து தருகிறது.

ஐபோன் 16 மாடல்களில் இருந்ததைப் போன்ற கேமரா கண்ட்ரோல் வசதி இந்த புதுவரவில் இல்லை. ஆனால், ஆப்பிளின் ட்ரேட்மார்க்கான ஆக்‌ஷன் பட்டன் வழக்கம்போல இடம்பெறத் தவறவில்லை.

அதிவேக சார்ஜிங் வசதி இல்லை: யுஎஸ்பி - சி டைப் சார்ஜிங் பேனலுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஐபோன் 16இ, அதிவேக சார்ஜிங் வசதி கொடுக்கப்படவில்லை. மாறாக, 7.5 வாட் பவர் கொண்ட கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது, உயர் ரக ஐபோன்களில் வழங்கப்படும் 25 வாட் பவர் சார்ஜிங் திறனுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். விலை குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை நீடித்திருக்கும் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால் பவர் பேங்க்கை எடுத்துச் செல்ல தவறினால் கவலைப்பட வேண்டியதில்லை.

விலை: ஐபோன் 16இ ஆரம்பநிலை ரகமே 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதக வருகிறது. 64 ஜிபி வேரியண்ட் ஐபோன் 16இ மாடலில் இல்லை.

இத்தனை சிறப்பம்சங்களுடன் ஜொலிக்கும் ஐபோன் 16இ விலையோ 599 டாலர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலையுடன்(1,199 டாலர்) ஒப்பிடுகையில் பாதி விலைதான்.

இந்தியாவில் முன்னணியில் இருக்கும் டாப்-5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிளும் அண்மையில் இணைந்துள்ளது. இந்த நிலையில், ரூ. 59,900 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய ஐபோன் 16இ கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 13.88 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மா... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவடைந்தது. தொடர்ச்சியாக அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய குறியீட்டில் மீட்சி ஆகியவற்றால் இது வெக... மேலும் பார்க்க

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 420 புள்ளிகளும், நிஃப்டி 22,800 புள்ளிகளுக்கு கீழே முடிவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான அமெரிக்க சந்தைகள் மற்றும் கட்டண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வாரத்தின் கடைசி நாளான இன்று பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்... மேலும் பார்க்க

வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகித்தைக் குறைப்பதாக ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 20% உயா்வு

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவன... மேலும் பார்க்க

9% சரிந்த பிண்ணாக்கு ஏற்றுமதி

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 9 சதவீதம் சரிந்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் ராப்சீட் பிணணாக்கு, ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாகக் குற... மேலும் பார்க்க