செய்திகள் :

ஆப்பிள் நிறுவனத்தில் மோசடி! இந்தியர்களும் பணிநீக்கம்!

post image

கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் தொண்டு செய்தால், அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு ஆப்பிள் பணியாளர் நன்கொடை அளித்தால், அதன் ரசீதைக் காட்டி, அந்த நன்கொடை தொகையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம். மேலும், நன்கொடை தொகைக்கு வரி விலக்கும் உண்டு.

இந்த நிலையில், அங்கு பணிபுரியும் சிலர், தங்கள் சொந்த தொண்டு நிறுவனத்துக்கே நன்கொடை அளித்து, அதன் ரசீதைக் காட்டி, நிறுவனத்திடம் இருந்து நன்கொடை தொகையையும் பெற்றுள்ளனர். இதன்மூலம், அவர்கள் அளிக்கும் நன்கொடையும் அவர்களுக்கே கிடைக்கும்; நிறுவனம் சார்பாகவும் நன்கொடை கிடைக்கும்.

இதையும் படிக்க:இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? கேம் சேஞ்சர் திரை விமர்சனம்!

இதற்கிடையே, நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் அதிகமானோர் திடீரென நன்கொடை அளித்து வருவதால், ஆப்பிள் நிறுவனத்துக்கு சந்தேகம் துளிர்விட்டது. இதனைத் தொடர்ந்து, நன்கொடை அளிப்பவர்கள் குறித்தும், அவர்கள் நன்கொடை அளிக்கும் தொண்டு அமைப்புகள் குறித்தும் விசாரணை நடத்தியதில், நன்கொடை அளிப்பவர்களின் சொந்த தொண்டு அமைப்புகளுக்கே பணம் செலுத்தப்படுவது தெரிய வந்தது.

இவ்வாறான மோசடி மூலம் 3 ஆண்டுகளில் சுமார் 1.52 லட்சம் டாலர் (ரூ. 1.30 கோடி) மோசடி செய்த 6 பேர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வகையான மோசடியில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்தும் அதிரடியான நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதுதவிர, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் இருப்பினும், அவர்களில் பெரும்பாலும் தெலுங்கர்கள் என்றும் கூறப்படுகிறது.

நடிகைக்கு பணம் அளித்த வழக்கு: டிரம்ப் விடுவிப்பு!

ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

வாடகை நண்பர்!! ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதிக்கும் ஜப்பானியர்!

ஜப்பானில் தனிமையில் இருப்பவர்களுக்கு நண்பராக வாடகைக்கு செல்லும் நபர் ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதித்து வருகிறார்.ஆனால், பாலியல் செயல்பாடுகள், காதல் துணையாக ஒருபோதும் அவர் சென்றதில்லை என்பது குறிப்பி... மேலும் பார்க்க

எல்லையில் அமைதி.. பிரம்மபுத்திராவில் அணை: இதுதான் சீனாவின் தந்திரமோ?

இந்தியாவுக்குள் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றுக்குக் குறுக்கே உலகிலேயே மிகப்பெரிய அணையைக் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டிருப்பது, எல்லையில் அமைதி, ஆற்றில் போர் என்ற தந்திரமாக இருப்பதை வெளிச்சம் போட்டு... மேலும் பார்க்க

ரஷியா: கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ. 81,000 ஊக்கத்தொகை!

கல்லூரி மாணவிகள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றால் ஒரு லட்சம் ரூபிள் வழங்கப்படும் என்று ரஷியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகளை தொடர்ந்து, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷிய அரசு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! அண்டை வீட்டாருக்கு உதவிய கனடா பிரதமர்!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் உள்பட பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச்... மேலும் பார்க்க

கலிஃபோா்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருவதால் இன்னும் அதிக சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.இந்தக் காட்டுத் தீயில் இது... மேலும் பார்க்க