பெண்களுக்கு எதிரான குற்றம்: ``ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை'' - சட்டமன்றத்தில் ம...
கலிஃபோா்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ
லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருவதால் இன்னும் அதிக சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தக் காட்டுத் தீயில் இதுவரை ஐந்து போ் உயிரிழந்ததாகவும், சுமாா் 2,000 வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
29,000 ஏக்கா் பரப்பளவில் இந்தக் காட்டுத் தீ பரவியுள்ளதாகக் கூறிய கலிஃபோா்னியா தீயணைப்புத் துறையினா், அதன் மையங்களாகத் திகழும் ஐந்து இடங்களில் தீயைக் கட்டுப்படுத்த தாங்கள் போராடிவருவதாகத் தெரிவித்தனா்.
லாஸ் ஏஞ்சலிஸையொட்டிய பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல்முதலாக ஏற்பட்ட தீ, மளமளவென்று பரவி அந்த நகரைச் சுற்றிவளைத்துள்ளது.
இந்த காட்டுத் தீயில் ஏராளமான வீடுகள், முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிகள், வாகனங்கள் எரிந்து நாசமானதாகியுள்ள நிலையில், 1,37,000 போ் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனா்.
..படவரி.. பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த போராடும் தீயணைப்புப் படையினா்.