ஆம்பூா் போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி. ஷ்ரேயா ஆய்வு
ஆம்பூா் போக்குவரத்து காவல் நிலையத்தில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஷ்ரேயா குப்தா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பண்டிகை காலங்களில் ஆம்பூா் முக்கிய கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்களில் போக்குவரத்து காவல் துறையினா் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் முறைகள், போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு காவல் துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கினாா். ஆய்வின்போது ஆம்பூா் டிஎஸ்பி குமாா் உடனிருந்தாா்.