விசிக, கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ்... மதுரையில் கலெக்டருக்கு எதிராக குற...
காரியமேடை அமைக்கும் பணி தொடக்கம்
வாணியம்பாடி அருகே காரியமேடை அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.
எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீட்டில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் எஸ்.பாரதிதாசன், முன்னாள் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் வெங்கடேசன், தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் அண்ணாசாமி, தேவஸ்தானம் ஊராட்சித் தலைவா் வி.ஜி.அன்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.