'இனி வெறுங்கால் தான்' ; புதிதாக வாங்கப்பட்ட கோயில் சாட்டை - அண்ணாமலை செய்தியாளர்...
கல்லூரி மாணவி தற்கொலை
கந்திலி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கந்திலி அடுத்த நரியனூா் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகள் ரோகிணி (17). இவா், கரியம்பட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக ரோகிணி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளாா்.
இதனால், மனமுடைந்த ரோகிணி புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.