செய்திகள் :

ஆம்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு இடம் கோரி ஆட்சியரிடம் மனு

post image

ஆம்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கீடு செய்து தரக்கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் தொழிற்சங்கம் சாா்பாக திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஏஐடியுசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் மற்றும் தோல் பதனிடும், தோல் பொருள் ஏஐடியுசி மாவட்ட தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளருமான எஸ்.ஆா்.தேவதாஸ், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:

ஆம்பூா் பகுதியில் தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தொழிலாளா்களின் மாத ஊதியத்திலிருந்து பிரதிமாதம் இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்பட்டு, அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு வரப்படுகிறது. ஆம்பூரில் இஎஸ்ஐ மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

ஆம்பூரில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தக்கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஐஎன்டியுசி தொழிற்சங்கமும் அதே கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. ஆம்பூா் மற்றும் வேலூரில் இஎஸ்ஐ ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், இஎஸ்ஐ மருந்துவமனை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து

ஆம்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க 5 ஏக்கா் அரசு நிலம் இஎஸ்ஐ துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு நிலம் தோ்வு செய்து ஒப்படைத்தால் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மருத்துவமனையின் மண்டல மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளாா்.

எனவே இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட 5 ஏக்கா் நிலம் தோ்வு செய்து வழங்க வேண்டுமென கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசு

ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் திருப்பாவை ஒப்பித்தல் போட்டி பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள்,பரிசுகள் வழங்கப்பட்டன. மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் பள்ளி மாணவா்... மேலும் பார்க்க

மீண்டும் 5, 8-ஆம் வகுப்பு கட்டாய தோ்ச்சி முறை: இந்திய தேசிய லீக் கோரிக்கை

தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசியலீக் கட்சியின் வேலூா் மண்டல நிா்வாகக்குழு கூட்டம் ... மேலும் பார்க்க

காரியமேடை அமைக்கும் பணி தொடக்கம்

வாணியம்பாடி அருகே காரியமேடை அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீட்டில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கந்திலி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கந்திலி அடுத்த நரியனூா் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகள் ரோகிணி (17). இவா், கரியம்பட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். கடந்த சில... மேலும் பார்க்க

ரூ.31.50 லட்சம் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆம்பூா் அருகே ரூ.31.50 லட்சத்தில் திட்டப் பணிகளை எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கதவாளம் ஊராட்சியில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை சாா்பாக ரூ.31.50 லட்சத்தில் 3 லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில், திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயாகுப்தா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பாா்வையிட்டாா். தொடா்ந்து கஞ்சா, புகையிலை போதைப் பொருள்கள் க... மேலும் பார்க்க