Fitness: நோ ஜிம், நோ டயட்... 37 கிலோ எடையை குறைத்த 36 வயது பெண் - எப்படி?
திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசு
ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் திருப்பாவை ஒப்பித்தல் போட்டி பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள்,பரிசுகள் வழங்கப்பட்டன.
மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் பள்ளி மாணவா்களுக்கான திருப்பாவை ஒப்பித்தல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் முதல் 10 பாசுரங்களையும், 6 முதல் 10 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் முதல் 20 பாசுரங்களையும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் 30 பாசுரங்களையும் ஒப்பித்தனா்.
அதில் சிறப்பாக ஒப்புவித்த மாணவ- மாணவிகளுக்கு முதல் 3 பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.