இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதனிடையே வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
அரசு நலத் திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்குத் தடை: தமிழக அரசு மேல்முறையீடு
வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்க கூடாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கில் ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.