செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

post image

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர்.

இவர்களில் நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர், தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

கைது செய்யப்பட்டதற்கு குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தைச் சுட்டிக்காட்டி குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரிய மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இயந்திரத்தனமாக குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறிய நீதிபதிகள், 'குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கிவிடக் கூடாது என்றும் வழக்கின் தீவிரத்தை முழுமையாக கருத்தில்கொண்டே ஜாமீன் மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

The Madras High Court ordered that the Goondas Act against 17 people arrested in the murder case of former Bahujan Samaj Party state president Armstrong is cancelled.

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய ... மேலும் பார்க்க

காலமானார் ஓ.எம். துரைசாமி

ஈரோடு: கோபி சின்ன மொடச்சூரை சேர்ந்த ஓ.எம்.துரைசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை காலமானார்.கோபி எம்ஜிஆர் சிலை அமைப்புக்குழு பொருளாளராக இருந்துள்ள ஓ.எம்.துரைசாமிக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ... மேலும் பார்க்க

விஜயகாந்த் புகைப்படத்தை எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது! - பிரேமலதா

எந்த கட்சியும் விஜயகாந்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜயகாந்த் படத்தை எக்காரணம் க... மேலும் பார்க்க

வட மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பது தவறானது; ஊழலும்கூட: நயினார் நாகேந்திரன் பேட்டி

தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர்களைச் சேர்ப்பது தவறானது, அதுவும் ஒரு ஊழல்தான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்வதற்காக சென்னையிலிருந்... மேலும் பார்க்க

கோவை உள்பட 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 1. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.2. தென் ... மேலும் பார்க்க

6.41 லட்சம் பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 6) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற... மேலும் பார்க்க