செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான பிரபல `கூலிப்படைத் தலைவன்’ மரணம் - நாகு என்கிற நாகேந்திரனின் பின்னணி

post image

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் நாகு என்கிற நாகேந்திரன். இவர் சிறுவயது முதலே பாக்ஸராக வேண்டும் என்ற கனவோடு வலம்வந்தவர். அதனால் வடசென்னையிலுள்ள பாக்ஸிங் கோச்சிங்கில் சேர்ந்தார். அங்கே விஜி என்ற பாக்ஸருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. பாக்ஸர் விஜியும், வடசென்னையில் 1990-களில் கோலோச்சிய பிரபல ரௌடி வெள்ளை ரவியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் விஜி மூலம் நாகேந்திரனுக்கு வெள்ளை ரவியின் அறிமுகம் கிடைக்க... அவரது வாழ்க்கை தடம்மாறத் தொடங்கியது. வெள்ளை ரவி, விஜி, நாகேந்திரன் மூவரையும் ‘மும்மூர்த்திகள்’ என்று அழைக்கும் அளவுக்குக் கொலை, கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சிகளில் கூட்டாக ஈடுபடத் தொடங்கினார்கள்.

எதிரியை ஒரே குத்தில் நாகேந்திரன் நிலைகுலைய வைத்துவிடுவார் என்பதால், வெள்ளை ரவியின் ரௌடி டீமில் முக்கியத் தளபதியாக மாறினார் நாகேந்திரன். 1990-ல் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், முதல் தடவையாக வியாசர்பாடி போலீஸாரால் நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றார். அதன் பிறகு 1991-ல் நாகேந்திரன்மீது கொலை வழக்கு பதிவானது. இப்படி நாகேந்திரன்மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி அவர் பிரபல தாதாவானார்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

வடசென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாகேந்தினுக்கு 1997-ல் நடந்த வியாசர்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கு தலைவலியாக மாறியது. இந்த வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் சிறைக்குள் இருந்தபடியே தன்னுடைய கூட்டாளிகள் மூலம் வடசென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நாகேந்திரன். இவர்மீது ஐந்து கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் இருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

இந்தச் சூழலில்தான் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறையிலிருந்தபடி தன்னுடைய மகன் அசுவத்தாமன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக நாகேந்திரன் மீதும் அசுவத்தாமன் மீதும் செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் நாகேந்திரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் சிறைப்பறவையாக இருந்த நாகேந்திரனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்தது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நாகேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு நிகழ்வுகளை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற வாலிபர்!

துாத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இரண்டு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் இரண்டு நாய்களையும் வீட்டின் முன் சங்கிலியால் கட்டி போட்டி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 47 மீனவர்கள் சிறை பிடிப்பு; இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை- மீனவர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்க கடலில் உள்ள பாக் நீரிணை ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பெண் குழந்தையைக் கடத்த முயற்சி? வடமாநில நபரைக் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில், வடமாநில நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்திருக்கிறார். திடீரென அந்த நபர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த தம்பிதுரை ... மேலும் பார்க்க

மது விருந்தில் தகராறு: பாலிவுட் நடிகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர்

பாலிவுட்டில் ஜுண்ட் என்ற படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் பாபு செத்ரி என்ற பிரியன்ஷு க்ஷத்ரியா(21). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாபு செத்ரி நேற்று தனது நண்பர் துரு ஷா என்பவருடன்... மேலும் பார்க்க

``முறையான சிகிச்சை இல்லை, மகள் மரணம்; அமைச்சருக்கு டெடிகேட் செய்கிறேன்'' - டாக்டரை வெட்டிய தந்தை

கேரள தாமரச்சேரி அரசு மருத்துவமனைகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியைச் சேர்ந்தவர் அனூப். இவரது 9 வயது மகள் அனயா கடந்த ஆகஸ்ட் மாதம் காய்ச்சல் காரணமாக தாமரச்சேரி அரசு தாலுகா மருத்துவமனையில் சிக... மேலும் பார்க்க

`மோசடி பணம் 60 கோடியை முதலில் செலுத்துங்கள்'- ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி மறுப்பு

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். ராஜ் குந்த்ராவும், ஷில்பா ஷெட்டியும் சேர்ந்து டெலிஷாப்பிங் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம... மேலும் பார்க்க