செய்திகள் :

`ஆயிரம் பொய் சொல்லியாவது!' - குறுங்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஆயிராம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும் என்பது வைத்தீஸ்வரன் பாலிசி. ஆனால், வித்யா ராணிக்கோ அதில் உடன்பாடில்லை!  காரணம் கல்யாணம்கறது ஆயிரங்காலத்துப் பயிர் என்பது அவளுடைய தீர்கமான எண்ணம்.

மாப்பிள்ளை வீட்டுக்குப் ஃபோன் பண்ணினான். 

‘நான்தான் வைத்தி பேசறேன். ஒரு பொண்ணு வீடு இருக்கு!., பையன் ஒரு காலேஜில லெக்சரராயிருக்கான். பார்க்கலாமா? கேட்டான் பொண்ணோட அப்பாட்ட.

பொன்னம்பலம் அவர்தான் பொண்ணோட அப்பா. பாவம் ஒரு அப்பாவி. ‘இத, பாருங்க வைத்தீ…! நீங்க புரோக்கர்! கமிஷனுக்காக எதையாவது பொய்யச் சொல்லி,  என்னை ஏமாத்திடாதீங்க!’ என்றார் குரல் தழுதழுக்க.

‘சே! சே! உங்களுக்கு நான் அப்படிச் செய்வேனா!? நான் புரோக்கரா இருக்கலாம், ஆனா எங்களுக்கும் சில நியா தர்மங்கள் உண்டு! பையன் நல்ல பையன்! எனக்குச் சொந்தம் ஒரு வகையில! நான் அவனுக்கு மாமா முறையாகுறேன்..’ அதான் இந்த சம்பந்தம் நல்லதாச்சேன்னு நெனைச்சுச் சொல்றேன்!’னார்.

பொன்னம்பலம் சினிமாப் பொன்னம்பலம் மாதிரி இருப்பார். ஆனால் மென்மையான குரல் இயல்பு பாவம்!

பொண்ணுக்குப் புடிக்கணுமே…?!’ என்றார் பொன்னம்பலம்.

நல்லாச் சொன்னீங்க போங்க …! புடிக்காம என்ன?! மாப்பிள்ளை சினிமா ஸ்டார் மாதிரி,  அந்தக் கால அப்பாஸ் மாதிரி இருப்பான் என்றார்! .மாப்பிள்ளையிடம் சொல்லி, பொண்ணு பார்க்க வரச் சொன்னார்கள்!. சிம்பிளாய்… டீ பஜ்ஜி கேசரியோடு பெண் பார்க்கும் படலம் ஏற்பாடானது…!. பார்த்துவிட்டுப் போனார்கள்.

பொன்னம்பலம் பெண்ணிடம் கேட்டார்… ‘ என்னம்மா… மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா?! கட்டாயமில்லே! இது, .. இல்லேன்னா வேற எடம் பார்க்கலாம்.’ என்றார் பொன்னம்பலம்.

பொண்ணு வாய் பேசவில்லை!!

‘வேற எடமா அதெல்லாம் எதுக்கு?! இதையே பேசி முடிச்சிடலாம். பையனுக்கும் பெண்ணைப் பிடிச்சிருக்காம்!’ என்றார் வைத்தி.

‘சார்… நீங்க சும்மா இருங்க கொஞ்சம்! கமிஷனுக்காக அலையாதீங்க! 

கட்டாயப்படுத்திக் கல்யாணம்பண்ணி வச்சிடக்கூடாது! ஆயிரம் காலத்துப்பயிர் கல்யாணம்கறது என்றார் பொன்னம்பலம்!.

நீங்க எப்படி  உறவாறீங்க? என்றார் சந்தேகமாக பொன்னம்பலம்.

நான் அடிக்கடி நாகேஸ்வரராவ் பார்க்குல உக்கார்ந்துதான் போஸ்ட்ல வந்திருக்கிற வரன்களையும்,  பொண்ணையும் பொருத்திப் பார்ப்பது வழக்கம்! அப்படி பார்க் போகும் போது உங்க பெண்ணும் இந்தப் பையனும் அடிக்கடி சந்திச்சு லவ் பண்றதை அந்தப் பார்க்கில பார்த்திருக்கேன்னு சொல்ல வா முடியும்?! ரெண்டுபேரும் எதுக்கோ பயப்படறாங்க போல! 

’லவ்’ வுனு சொல்லி ஆரம்பிச்சா, குய்யோம்யுறையோன்னு குதிச்சு ரெண்டு வீட்டுலயும் காரியத்தைக் கெடுத்துடக்கூடாது இல்லையா? ஒரே ஒரு பொய்… நான்  மாமான்னு சொன்னேன்..!

எதுக்கு??  ஆயிரம் பொய் சொல்லி அல்ல.,  ஒரே ஒரு பொய்யைச் சொல்லி,  ஒரு கல்யாண ஏற்பாட்டுக்கு வழி பண்ணினேன்!. சாரி.. தப்பா நெனைச்சுக்காதீங்க என்று கைஎடுத்துக் கும்பிட்டுச் சொல்ல ஆசைப்பட்டும், சொல்லாம தான் மாமா உறவு என்று மட்டும் சொல்ல, பொண்ணு வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்ட்டாருக்கும் பிடித்துப் போகப் பண்ணினதால்.. வைத்தி சந்தோஷப்பட்டார். இரு வீட்டாரும் இன்பமாய்கைகுலுக்கி சந்தோஷித்தார்கள் இந்த விவரம் தெரியாமல் வைத்தியை!!                                 

-வளர்கவி

கோவை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

இந்துவின் நடிப்பு - குறுங்கதை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நிதானம் தவறிக்கெட்டு! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பரிசு..! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலம் - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

புகைச்சல்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

மார்பிலே பட்ட காயம்! - ஒரு ராணுவ வீரரின் கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க