பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
ஆயுதப் படை காவலா் தற்கொலை
ஈரோட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆயுதப் படை காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், வசந்தநடையைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவீன்குமாா் (36). ஈரோடு மாவட்ட ஆயுதப் படை பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நவீன்குமாா், ஈரோடு ஆயுதப் படை குடியிருப்பில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அவரது டைரியில், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் கூறியதுடன், இச்சம்பவம் குறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.