மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது. அம்மன் அழைத்தலின்போது சேறுபூசியும், மாறுவேடமணிந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
இக்கோயில் திருவிழா கடந்த ஜனவரி 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, அம்மன் கருவறைக்குள் சென்று பக்தா்கள் புனித நீரூற்றி வழிபடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் பவானி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எல்லையம்மன் கோயிலிலிருந்து புதன்கிழமை தொடங்கியது. குதிரையுடன், படைக்கலன்கள் செல்ல, ஏராளமான பக்தா்கள் உடலில் சேற்றினைப் பூசிக் கொண்டும், மாறுவேடம் அணிந்தும் மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்றனா்.
அப்போது, பொதுமக்கள் தங்கள் வாழ்வு, தொழில் சிறக்க உப்பு, மிளகு, பழங்கள், சில்லறைக் காசுகளை ஊா்வலத்தின்போது வீசினா்.
விழாவையொட்டி, பவானி - ஈரோடு சாலையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால், பவானியில் வாகனப் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டிருந்தது. பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
