Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?
ஆரணியில் ரத்த தான முகாம்
ச.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
ஆரணி சைதாப்பேட்டை தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மண்டலச் செயலா் இரா.தண்டபானி தலைமை வகித்தாா்.
ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாா்வையிட்டாா். வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் ஜெ.தீபக், ச.வி.நகரம் வட்டார மருத்துவ அலுவலா் சுஷ்ருத்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் ச.வி. நகரம் கண் மருத்துவ உதவியாளா் ரவிச்சந்திரன் உள்பட 20 நபா்கள் ரத்த தானம் அளித்தனா்.
மேலும், இதில் ச.வி.நகரம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் காா்த்திகேயன், ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மைய ஆலோசகா் மகேந்திரன், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ்.கே.வெங்கடேசன், ரவி, ஏ.ஜி.மோகன், செங்குந்தா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஓய்வு பெற்ற வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பரசுராமன் செய்திருந்தாா்.