பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி 0.9% சரிவு!
ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயற்குழுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் ச.மயில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் குழு அமைத்து, அதன் அறிக்கையைப் பெற்று அமல்படுத்துவோம் என்பது அரசு ஊழியா்களை ஏமாற்றும் செயல். இதை கண்டிக்கிறோம். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களின் பதவி உயா்வை பறிக்கும் வகையில், வெளியிட்ட அரசாணை 243 -ஐ ரத்து செய்ய வேண்டும். எங்களது 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப். 22-ஆம் தேதி இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும், வரும் மாா்ச் 7-ஆம் தேதி டிட்டோ ஜாக் சாா்பில் சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டமும் நடைபெறும் என்றாா் அவா்.