செய்திகள் :

'ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும்' - ராகுல் காந்தி

post image

ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி முறை இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

தில்லியில் புதிய கல்விக் கொள்கை, யுஜிசியின் புதிய விதிகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றுக்கு எதிராக இந்திய தேசிய மாணவர் சங்கம் இன்று(மார்ச் 22) போராட்டம் நடத்தியது.

இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,

"இந்திய கல்விமுறையை அழிக்க ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகிறது. நம்முடைய கல்விமுறை அவர்களது கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிந்துவிடும், வேலைவாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.

ஏனெனில் ஆர்எஸ்எஸ்ஸால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள்தான் இப்போது இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக உள்ளனர். ​​மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எல்லாருமே ஆர்எஸ்எஸ்ஸால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள்.

தற்போது நாட்டின் மிகப்பெரும் பிரச்னை வேலைவாய்ப்பின்மைதான். சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி, கும்பமேளா குறித்துப் பேசினார். ஆனால் வேலைவாய்ப்பின்மை குறித்து அவர் பேச வேண்டும்.

பாஜக - ஆர்எஸ்எஸ் மாடல், அம்பானி மற்றும் அதானிக்கு ஒட்டுமொத்த வளத்தையும் வழங்க நினைக்கிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்று பேசினார்.

இதையும் படிக்க | சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க

தாய்மொழியில் மருத்துவக் கல்வி ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம்! -பிரதமர் மோடி

நாகபுரி: தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்கிற நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பது ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடிப்பு; 2 பேர் கைது

மகாராஷ்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் கைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் சுமார் 18,000 இந்தியா்கள் சட்டவிரோதமாகக் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவி... மேலும் பார்க்க