ஆர்சிபிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதுவென்ற சிராஜ் பேசியதென்ன?
பிஜிடி தொடருக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் முகமது சிராஜ் இந்திய அணியில் தேர்வாகவில்லை. அதனால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகாக தயாராகி வந்ததாகக் கூறியுள்ளார்.
நேற்று சின்னசாமி திடலில் நடந்த தனது முன்னாள் அணியான ஆர்சிபி உடனான போட்டியில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.

ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஆக்ரோஷமாக கொண்டாடினார். அவருக்கு மிகவும் பிடித்த ரொனால்டோ பாணியில் கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் விருதுபெற்ற பின் முகமது சிராஜ் பேசியதாவது:
உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன்
நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன். ஏனெனில் நான் இங்கு 7 ஆண்டுகளாக சிவப்புநிற (ஆர்சிபி) ஜெர்சியில் விளையாடி இருக்கிறேன்.
தற்போது, வேறு நிற ஜெர்சியில் விளையாடுகிறேன். அதனால் சிறிது பதற்றமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் இருந்தேன். என்னிடம் பந்து வந்ததும் நான் முழு கவனத்துக்கு திரும்பினேன்.
நான் தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்ததால் நான் என்ன தவறு செய்கிறேன் என உணர முடியவில்லை.
எனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் நான் எனது உடல்நலத்திலும் பந்துவீச்சிலும் கவனம் செலுத்தினேன். இது எனக்கு மன ரீதியாக உதவியது.
நம்பிக்கைதான் எல்லாமே
பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தேன். பயிற்சியாளர் நெஹ்ராவுடன் பேசினேன். பிறகு கூடுதல் தன்னம்பிக்கையுடன் இருந்தேன்.
நெஹ்ரா என்னிடம் மகிழ்ச்சியாக விளையாடு என்றார். அதைவிட தன்னம்பிக்கை அளிக்கும் விஷயம் வேறில்லை.
பந்துவீச்சாளராக எனக்கு ஒரு எண்ணம்தான். நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில் மனதில் பயம் வரும். ஒரு சிக்ஸர் அடித்தாலும் எதாவது புதியதாக முயற்சிக்க தோன்றும். அதனால், என்னால் முடியம் என்ற தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்.
எந்த விக்கெட்டில் பந்துவீசினாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடியும் என்ற அந்த எண்ணம்தான் என்னைச் சிறப்பாக செயல்பட வைக்கிறது என்றார்.
First away win of #TATAIPL2025 is definitely the icing on the pic.twitter.com/2Jkjk1VKRa
— Gujarat Titans (@gujarat_titans) April 2, 2025
Clean sweep of awards by the Titans pic.twitter.com/XWitbHYQgR
— Gujarat Titans (@gujarat_titans) April 2, 2025