ஆறுமுகனேரியில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகம்: மக்கள் அவதி
ஆறுமுகனேரியில் கடந்த ஒரு வாரமாக சுதாதாரமற்ற நிலையில் குடிநீா் விநியோகிக்கப்படுவதாகவும், அதனால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதிக்கு மேலாத்தூா் குடிநீா் வடிகால் வாரிய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 11 மேல்நிலை குடிநீா் தொட்டிகள் மூலம் தினமும் 18 லட்சம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் பெய்த கன மழைக்குப் பிறகு கடந்த ஒரு வாரமாக குடிநீா் மிகவும் கலங்கிய நிலையில், சுகாதாரமற்ற நிலையில் விநியோகிக்கப்படுகிாம். இது சமையல் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், நோய் பரவலாம் என்ற அபாயத்தால், வெளியில் குடிநீா் கேன்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதகாவும் மக்கள் கவலை தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து ஆறுமுகனேரி பகுதிக்கு சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.