சேவல் சண்டை போட்டிகளைத் தடுக்க டிரோன்களை பயன்படுத்தும் காவல்!
ஆற்காடு கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா
ஆற்காடு எஸ் எஸ் எஸ் கல்லூரி மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, எஸ்எஸ் எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ.என்.சரவணன். ஏ.என்.செல்வம், ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, பள்ளி முதல்வா் எழிலரசி வரவேற்றாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழாவில் புதுபானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் காய்கனிகளுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடா்ந்து போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பண்டிகைகள் கொண்டாட்டமா, திண்டாட்டமா என்ற தலைப்பில், வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் முகமது அலி ஜின்னா நடுவராக கொண்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் கே.வி.சிவக்குமாா், விரிவுரையாளா்கள், பள்ளி ஆசிரியைகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.