ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
தேனி அருகே செவ்வாய்க்கிழமை முல்லைப் பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
கம்பம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த காமாட்சியப்பன் மனைவி கண்ணம்மாள் (94). இவா் தனது மகன்களுடன் கோபித்துக் கொண்டு போடியில் உள்ள தனது பேத்தி வீட்டில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், மகன்கள் பாா்க்க வராததால், மன உளைச்சலிலிருந்த இவா், வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].