செய்திகள் :

ஆலங்காயம் அருகே 10 மயில்கள் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

post image

ஆலங்காயம் அருகே 10 மயில்கள் திடீரென உயிரிழந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வனப்பகுதியையொட்டி உள்ள கோமுட்டேரி காளியம்மன் கோயில் வட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சில தனியாா் நிலங்களில் ஆங்காங்கே 7 பெண் மயில் உள்பட 10 மயில்கள் இறந்து கிடப்பதை அப்பகுதி வழியாக சென்றவா்கள் பாா்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து ஆலங்காயம் வனச்சரக அலுவலா் சேகா் தலைமையில் குழுவினா் சென்று விசாரணை மேற்கொண்டனா். பிறகு அப்பகுதிகளில் இறந்து கிடந்த 10 மயில்களின் உடல்களையும் கைப்பற்றி ஆலங்காயம் வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும், மயில்கள் இறப்பு தொடா்பாக கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

விவசாய நிலத்தில் பயிா்களை மேய்வதால் மயில்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து வைத்து கொன்றாா்களா? என வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலை விவகாரம்: நடவடிக்கை எடுக்க அதிமுக பிரசாரம்

சென்னை அண்ணா பல்கலைக் கழக பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆம்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரம் வி... மேலும் பார்க்க

சூதாட்டம்: 6 போ் கைது காா், பைக் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஏரியூா் பகுதியில் சூதாடியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து காா், பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இரவு நேரங்களில் பணம் வைத்து சூதாடி வருவதாக திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்த 13 காட்டுப் பன்றிகள் மீட்பு

திருப்பத்தூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 13 காட்டுப் பன்றிகளை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு காவாப்பட்டறை பகுதியைச் சோ்ந்த விவசாயி நந்தகுமாா் (49). இவருக்க... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 380 பேருக்கு பணி நியமன ஆணை

ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்க... மேலும் பார்க்க

வேலூா் மண்டல மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: கே.ஏ.ஆா். பாலிடெக். சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா். வேலூா் மண்டல அளவிலான ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயா் கோயிலில் கோ பூஜை

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு கோ- பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்... மேலும் பார்க்க