இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்...
ஆலங்குடியில் இளைஞரை வெட்டியவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி கலைஞா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் பாரதிதாசன் (23). இவா், ஆலங்குடி அம்பேத்கா் நகா் பிரிவு சாலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றபோது, மா்மநபா்கள் பாரதிதாசனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த பாரதிதாசன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாரதிதாசனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற ஆலங்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் மணி(எ) ஜோதிரூபனை கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.