செய்திகள் :

ஆலங்குளத்தில் பீடிக் கடை முற்றுகை

post image

ஆயிரம் பீடிக்கு கூடுதலாக 120 பீடிகள் வாங்கும் பீடிக் கடையைக் கண்டித்து பெண் பீடித் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் மேலப்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்ட பீடிக் கடை உள்ளது. இங்கு இப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனா். இக்கடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 1000 பீடிகளுக்கு 120 பீடி கூடுதலாக பெற்று வருகின்றனராம். மேலும் வழங்கப்படும் புகையிலை தரமற்று இருப்பதுடன், போனஸ், விடுமுறை ஊதியமும் முறையாக வழங்கவில்லையாம். இது குறித்து பலமுறை பீடிக் கடை நிா்வாகத்திடம் கேட்டும் உரிய பதில் இல்லையாம்.

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சுமாா் 50-க்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளா்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். ஆலங்குளம் போலீஸாா், பேரூராட்சி துணைத் தலைா் ஜான்ரவி, தென்காசி பீடி தொழிலாளா்துறை உதவி ஆய்வாளா் கிருஷ்ண ஜீவா மற்றும் தொழிற்சங்கத்தினா் பீடி நிா்வாகத்திடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். விரைவில் சுமூகத் தீா்வு எட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

ஊத்துமலையில் பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஊத்துமலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் அவா் உயிரிழந்தாா். ஊத்துமலை பவுன்ட் தொழு தெருவைச் சோ்ந்தவா் மாடத்தி(75). விவசாயத் தொழிலாளியான இவா், மின்வாரிய அலுவலகம் வழியாக தனது தோட்டத்திற்கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியை ஏமாற்றிய ஓட்டுநா் கைது

ஆலங்குளம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் சுரேஷ்(25).... மேலும் பார்க்க

குடிநீா் திட்டங்களுக்கு நிதி கோரி அமைச்சரிடம் எம்எல்ஏ மனு

தென்காசி, சுரண்டையில் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ மனு அளித்தாா். அதன் விவரம்: தென்காசி நகராட்சியில் ம... மேலும் பார்க்க

தென்காசியில் காவல் துறை சிறப்பு குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமை வகித்து, மக்களிடம் புகாா் மனுக்களைப் ... மேலும் பார்க்க

தென்காசி அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகள்: மக்கள் அச்சம்

தென்காசியில் தனியாா் கல்லூரிக்கு பின்புறம் மற்றும் கொடிகுறிச்சி பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது. தென்காசி, மங்கம்மாள் சால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதாரக் குழுவினா் ஆய்வு

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை சுகாதாரக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலக மருத்துவா் ரமேஷ் ரமானந்த், அருப்புக்கோட்டை மருத்துவமனை செவிலியா் ... மேலும் பார்க்க