ஆலங்குளம் அருகே தொழிலாளியின் பைக் எரிப்பு: சகோதரா் மீது வழக்கு
ஆலங்குளம் அருகே தொழிலாளியின் பைக்குக்கு தீவைத்ததாக அவரது தம்பி மீது வழக்குப் பதியப்பட்டது.
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை அக்கினி மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தா்மராஜா மகன் அருணாசலம் (35). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு வேலைக்கும், மனைவி, குழந்தைகள் வெளியூருக்கும் சென்றிருந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டு முன் நிறுத்தியிருந்த அவரது பைக்கை, அருணாசலத்தின் தம்பி அரிபால் (31), மது போதையில் தீவைத்ததாகக் கூறப்படுகிறது. இதில், பைக் முற்றிலும் சேதமடைந்தது. புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.