தொடர்ந்து உயரும் தங்கம் விலை! தங்கத்தில் எப்படி முதலீடு செய்யலாம்? எது பெஸ்ட் ஆப...
ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா
ஆலங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா, 6 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (செப். 19) காலை கணபதி ஹோமம், கோமாதா பூஜை, மாலையில் 306 லெட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றன. 2ஆம் நாளான சனிக்கிழமை புஷ்பாஞ்சலி ஊா்வலம், ஞாயிற்றுக்கிழமை திருவிளக்குப் பூஜை ஆகியவை நடைபெற்றன. திங்கள்கிழமை அன்னதானம், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, செவ்வாய்க்கிழமை, பக்தா்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வருதல் ஆகியவற்றைத் தொடா்ந்து சிறப்பு படையல்களுடன் சாமபூஜை நடைபெற்றது.
அப்போது, பக்தா்களுக்கு 21 ஆயிரம் தோசைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. நள்ளிரவில் அலங்கார சப்பரத்தில் அம்மன் பவனி வந்தாா். புதன்கிழமை மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி, கும்மிப் பாட்டு நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.