மசோதா மீது ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றம்
ஆலத்தூா் கிராமத்தில் நாளை மக்கள் நோ்காணல் முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலத்தூா் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை (ஏப்.9) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூா் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறும், முகாம் நடைபெறும் முன்பாக கோரிக்கை மனுக்களை ஆலத்தூா் கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.