Pawan kalyan: பவன் கல்யாணின் இளைய மகன் தீ விபத்தால் பாதிப்பு
ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் இளைய மகன், மார்க் ஷங்கர் (8). சிங்கப்பூரில் பிரபல தனியார் பள்ளியில் படித்துவருகிறார் இவர். அவரது பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த விபத்தில் மார்க் ஷங்கரும் சிக்கி பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார். அவரது கை, காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தீ விபத்துப் புகையை சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மார்க் ஷங்கருக்கு சுவாசத்தில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மார்க் ஷங்கர் மற்றும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பவன் கல்யாண் இன்று ஆந்திரா, சிறீ அல்லூரி சீதாராம இராஜு பகுதியில் மக்களையும், கட்சிக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள திட்டமிட்டிருகிறார். அதை முடித்துவிட்டு, அடுத்தடுத்த அரசியல் பயணங்களை, நிகழ்வுகளை தள்ளி வைத்துவிட்டு சிங்கப்பூர் செல்லவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb