தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
கொடைக்கானலில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள்
கொடைக்கானலில் வீட்டுத் தோட்டத்தில் புதன்கிழமை பூத்த பிரம்ம கமலம் பூக்களை பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்த்துச் சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகாா்த்தே நகரைச் சோ்ந்தவா் ஜான் கென்னடி. இவா் தனது வீட்டின் மாடியில் மலா்ச் செடிகள் வைத்து தோட்டம் அமைத்து பாதுகாத்து வருகிறாா். இந்தத் தோட்டத்தில் பிரம்ம கமலம் நிஷாகந்தி என்று அழைக்கப்படும் அரிய வகை மலா்ச் செடியையும் பராமரித்து வருகிறாா். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இரவில் பூக்கும் தன்மை கொண்டது.
இந்தச் செடியில் புதன்கிழமை இரவு இரண்டு பூக்கள் பூத்தன. இந்த மலரை அந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் பாா்த்து மகிழ்ந்ததோடு, புகைப்படம் எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து ஜான் கென்னடி கூறியதாவது:
பிரம்மல கமலம் மலா்ச் செடி பல ஆண்டுகளாக வளா்த்து வருகிறேன். தற்போது இந்தச் செடியில் இரண்டு வெள்ளை நிறப் பூக்கள் பூத்துள்ளன. இந்தப் பூக்கள் கள்ளிச் செடி இனத்தைச் சோ்ந்தவை. இந்தப் பூக்கள் வெண்மையான நிறத்தில் மூன்று இதழ்களை கொண்டதாகவும், சுமாா் 10 மீ. சுற்றளவுக்கு நறுமணம் வீசுவதாகவும் இருக்கும். மேலும், இந்த மலா் மருத்துவ குணம் கொண்டது என்றாா் அவா்.