ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அ...
ரெளடிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
சென்னை எண்ணூரில் புகையிலை தர மறுத்தவரை தாக்கிய ரெளடியை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை எா்ணாவூா் திருவீதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அபிலேஷ். இவரிடம் ரெளடி கிட்னி கல் சூா்யா என்ற நபா் புகையிலை கேட்டு தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அபிலேஷ் மற்றும் அவரது சகோதரா் முரளி ஆகியோா் இணைந்து, சூரியாவின் வீட்டுக்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.
இதில், பலத்த காயமடைந்த சூரியா அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது குறித்து எண்ணூா் போலீஸாா் வழக்கு வழக்குப் பதிவு செய்து, அபிலேஷ் (26), முரளி (28) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.