Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் பாலஸ்தாபனம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் கோபுரங்கள் சீரமைப்பு, ஆலய புனரமைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் புதன்கிழமை பால ஸ்தாபனம் நடைபெற்றது.
வீரப்பூா் ஜமீன்தாா் பரம்பரை அறங்காவலா்கள் ஆா். பொன்னழகேசன், ஆா். செளந்தரபாண்டியன், கே. அசோக்குமாா், சுதாகா்(எ)கே. சிவசுப்பிரமணி ரெங்கராஜா, ஆா். தரனீஸ் மற்றும் பட்டையதாரா்கள், பட்டியூா் கிராம ஊா் முக்கியஸ்தா்கள் தலைமை வகித்தனா்.
தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்று அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. மூலவா் பெரியகாண்டியம்மன் விமானம், மூலவா் விநாயகா், பொன்னா் - சங்கா் தெய்வங்களின் விமானங்கள், மூலவா் கருப்பசாமி விமானம் பாலாலயம் செய்யப்பட்டது.
உபயதாரா்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் நன்செய் இடையாரை சோ்ந்த இரட்டைச் சகோதரா்கள் பொன்னா் - சங்கா் மற்றும் மணப்பாறை தொழிலதிபா் ராஜேஷ் ஆகியோரால் சுமாா் ரூ. 3 கோடியில் ஆலயத்தில் 3 நிலை கொண்ட ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் சீரமைப்பு, புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் விஜயகுமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அா்ஜூன், தொழிலதிபா் எம்.பி. வெங்கடாசலம், விமல் பழனியாண்டி, அகத்தீஸ்வரன் (காடுவெட்டி) தியாகராஜன், கோயில் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.