ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீரடிப்பட்டி கிராமத்தில் சித்திரை பொன்னோ் கட்டும் விழா
கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தில் பொன்னோ் கட்டும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விவசாயிகள் சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு விவசாயம் செழித்து வளர நல்லோ் என்னும் பொன்னோ் கட்டும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கம், இதே போல் நிகழாண்டு சித்திரை மாத பொன்னோ் கட்டும் விழா, வீரடிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகள் ஒன்று சோ்ந்து நல்லோ் கட்டினா். முன்பு மாடு ஏா் கலைப்பை கொண்டு நடந்து வந்த நிகழ்ச்சி, தற்காலத்துக்கு தகுந்தவாறு டிராக்டா் ஏா் கலப்பையுடன் நல்லோ்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு எருது, உரம் , விதை உள்ளிட்டவைகளை வயலில் தூவி இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தினா். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.