பங்குனி உத்திரத் திருவிழா: பழனியில் கட்டண தரிசனம் ரத்து!
திண்டுக்கல்: பழனியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பக்தர்கள் வசதிக்காகவும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஏப். 10-ஆம் தேதி இரவு திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம், 11-ஆம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறும். 14- ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
இந்த நிலையில், பங்குனி உத்திரத் திருநாளையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் திரள வாய்ப்புள்ளதால் ஏப். 11, 12, 13 ஆகிய முன்று நாள்கள் கட்டண தரிசனம் ரத்தாக்கப்பட்டுள்ளது.