செய்திகள் :

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம்!

post image

திருச்சி: திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 30-ஆம் தேதி) காலை 7.30 மணியளவில் தொடங்கியது.

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ விழா வெகு விமா்சையாக 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இந்த விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடா்ந்து பங்குனி தேரோட்டத்திற்காக 25-ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இன்று அலங்கரிக்கப்பட்டுள்ள தனித்தனி தேர்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். தேரோட்டத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம்பிடித்து இழுத்து திருவிழாவை சிறப்பித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.