ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கட்சிப் பிரமுகருக்கு வெட்டு; தேடப்பட்ட 15 போ் கைது
திருச்சியில் கட்சிப் பிரமுகா் வெட்டப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
திருச்சி தென்னூா் ஜாகீா் உசேன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி (48), மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா். இவரது மகன் பாகா என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் முகமது யுவாஸ் தரப்பினா் ஆயுதங்களுடன் தாக்கியதில் அஷ்ரப்அலி, அவரது சகோதரா்கள் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, யுவாஸ், ஷேக், அஷ்ரப் உள்ளிட்ட 5 பேரை செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமை 10 பேரையும் கைது செய்தனா்.