`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
`பவுனுக்கு ரூ.66,000-க்கும் கீழ் சென்ற தங்கம் விலை!' - இன்னும் குறையுமா? ஏன்?

நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.60-ம், ஒரு பவுனுக்கு ரூ.480-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,225 ஆக விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.65,800 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.102 ஆகும்.
இன்னும் குறையுமா?

ட்ரம்ப்பின் வரி விதிப்பினால் 2021-ம் ஆண்டு இருந்த அதே விலையை தற்போது கச்சா எண்ணெய் அந்த விலையை தொட்டுள்ளது. இது கிட்டதட்ட 20 சதவிகித குறைவாகும். பொதுவாக, கச்சா எண்ணெய் விலை குறையும் போது, தங்கம் விலை குறையும்.
இன்னொரு பக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்துள்ளது.
இந்த இரண்டின் காரணமாக, தங்கம் விலை தனது உச்சங்களை தொட்டது எல்லாம் முடிந்து இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.