செய்திகள் :

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

post image

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜவான் படத்தின் மூலம் ரூ. 1000 கோடி வசூலித்துக் கொடுத்த இயக்குநர்கள் பட்டியலில் அட்லி இடம்பிடித்ததிலிருந்து அவர் அடுத்தது யாரை நாயகனாக வைத்து படம் இயக்குவார் என அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.

அதேபோல், புஷ்பா மற்றும் புஷ்பா - 2 படங்களின் மூலம் இந்தியாவின் வசூல் மன்னனாக அல்லு அர்ஜுன் அவதாரம் எடுக்க, அடுத்ததாக இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் கதை அறிவியல் புனைகதையாக உருவாகியிருப்பதால் அல்லு அர்ஜுனும், அட்லியும் அமெரிக்காவிலுள்ள பிரபல லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்திற்கு சென்று படத்தின் முதல்கட்ட பணிகளையும் துவங்கியுள்ளனர்.

ரூ. 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ஜனனி!

நடிகை ஜனனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.மாடலிங் துறையில் 100-க்கும் விளம்பரங்களில் நடித்து பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. சிறிய பாத்திரங்களில் நடித்துவந்த நடிகை ஜன... மேலும் பார்க்க

ஜிங்குச்சா... தக் லைஃப் முதல் பாடல் அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. நடிகர்க... மேலும் பார்க்க

ரெட்ரோ டிரைலர் வெளியீட்டு விழா அறிவிப்பு!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக... மேலும் பார்க்க

சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி?!

சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வருகிற மே மாதம்... மேலும் பார்க்க