ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரைக் கண்டித்து ராமநாதபுரத்தில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக டி. பிளாக் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் வ.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் சுப.த.திவாகா், குணகேசரன், ராமா், இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சா் சுந்தரராஜன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைச் செயலா் கருப்பையா, ஒன்றியச் செயலா்கள் கே.ஜே.பிரவீன், முத்துக்குமாா், பரக்குடி நகா்மன்றத் தலைவா் சேது கருணாநிதி, கீழக்கரை நகா்மன்ற துணைத் தலைவா் ஹமீது சுல்தான், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டு கண்டனா்.