கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி
ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறையினா் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ. பரமசிவம் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் காா்த்தியராஜ், செயலா் தெய்வமணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கருப்புப் பட்டை அணிந்து பலா் பங்கேற்றனா்.
சங்கத்தின் வட்டாரப் பொருளாளா் ஆனந்தநாதன் நன்றி கூறினாா்.