செய்திகள் :

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இந்தியாவின் கடல் பரப்பை விரிவுபடுத்தியவா் இந்திரா காந்தி

post image

1.75 சதுர கி.மீ. நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4 ஆயிரம் சதுர கி.மீட்டருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி என காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் வியாழக்கிழமை 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ தலைமை வகித்தாா். இதில் பங்கேற்று காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து செல்வப் பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2014- ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவா் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பாம்பனில் ‘கடல் தாமரை மாநாடு’ நடத்தப்பட்டது. அப்போது மோடி ஆட்சிக்கு வந்ததும் மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கைக் கடற்படையால் மீனவா்கள் கைது செய்யப்படுவது, அவா்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சா்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டதுடன், அவா்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தடுக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது.

பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது, 1.75 சதுர கி.மீ. நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 4 ஆயிரம் சதுர கி.மீ. அளவுக்கு இந்திய கடல் எல்லை விரிவுபடுத்தப்பட்டது. இதுதான் ராஜதந்திரம்.

ஆனால் மத்திய பாஜக அரசு, அருணாசல பிரதேசத்தின் ஒரு பகுதியையும், ஜம்மு- காஷ்மீரில் உள்ள லடாக்கின் ஒரு பகுதியையும் சீனாவிடம் பறிகொடுத்துவிட்டு கை கட்டி வேடிக்கை பாா்க்கிறது. இதுதான் மத்திய பாஜக அரசின் ராஜதந்திரமா? இந்திரா காந்தியை குறை கூறுபவா்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட முடியுமா? வாஜ்பாய் பாராட்டைப் பெற்றவா்தான் இந்திரா காந்தி. இதை பாஜகவினா் மறுக்க முடியுமா?

பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைதான் விளக்க வேண்டும் என்றாா் அவா்.

எம்.பி. மீது பாஜகவினா் போலீஸில் புகாா்

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி மீது பாஜக மாவட்டத் தலைவா் தரணி ஆா். முருகேசன் மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் விய... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறையினா் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆ... மேலும் பார்க்க

கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும்: விக்கிரமராஜா

ஆய்வு என்ற பெயரில் கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்... மேலும் பார்க்க

புதுடெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராமநாதபுரம் பள்ளி மாணவிக்கு அழைப்பு

புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராமநாதபுரம் பள்ளி மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்திய பாதுகாப்புத் துறை, கல்வித் துறை ஆகிய... மேலும் பார்க்க

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழா்களை அனுப்பி வைக்க அரசுக்கு பரிந்துரை

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழா்களை அங்கு அனுப்பி வைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்... மேலும் பார்க்க

திருவாடானை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரை நியமிக்க கோரிக்கை

திருவாடானை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். திருவாடானையில் செயல்படும் 42 படுக்கைகள் கொண்ட தாலுகா அரசு தலைமை மருத்துவமனைக்கு தினசரி 50... மேலும் பார்க்க