ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
எம்.பி. மீது பாஜகவினா் போலீஸில் புகாா்
மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி மீது பாஜக மாவட்டத் தலைவா் தரணி ஆா். முருகேசன் மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது:
நான் புதன்கிழமை இரவு எனது கட்செவி அஞ்சலை பாா்வையிட்டபோது, அதில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி இந்துக்களின் புனிதத் தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தனது நண்பா்களுடன் மாமிச உணவுகளை உள்கொண்டது பதிவிடப்பட்டிருந்தது. மேலும் காவல் துறையினரை அழைத்து மாமிச உணவுகளை மேலே கொண்டு செல்பவா்களை தடுக்கக் கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறாா். இதன் மூலம் அந்த மலையின் மாண்பும், புனிதத் தன்மையும் கெடும் வகையில் நடந்து கொண்டதுடன், இந்து மத உணா்வுகளை புண்படுத்தி இருக்கிறாா்.
மேலும், சமய நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட இவரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.