ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும்: விக்கிரமராஜா
ஆய்வு என்ற பெயரில் கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வா்த்தக சங்கம், பேரமைப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெகதீசன், முதுகுளத்தூா் நகா் தலைவரும், மாநில இணைச் செயலருமான ராமபாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். முதுகுளத்தூா் நகா் வா்த்தக சங்க துணைத் தலைவா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகம்மது இக்பால் வரவேற்றாா்.
இதில், பங்கேற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா வணிகா் சங்கங்களின் கொடியை ஏற்றி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வணிகா்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் உரிமம் வழங்க வேண்டும். கடைகளில் திடீரென ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகள் உள்ளே சென்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனா். அது நிறுத்தப்பட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே துறையை மேலும் மேம்படுத்த வேண்டும். பாம்பன் பாலத்தை விரைவில் திறக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 33 வணிகா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். இதில் மாவட்ட பொதுச் செயலா் ஜீவானந்தம், முதுகுளத்தூா் நகா் செயலா் ஜகுபா் அலி, நகா் பொருளாளா் சந்திரசேகா், முன்னாள் வா்த்தக சங்கத் தலைவா்கள் கருப்பசாமி, காதா் முகைதீன், கௌரவத் தலைவா் அழகா்சாமி, முகம்மது ஜியாவுதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.