ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை; அமைச்சர் பேச்சுவார்த்தை
குண்டேரிப்பள்ளம் அணை அருகே விவசாய நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அனுமதி இல்லாமல் போடப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆழ்துளைக் கிணற்றை மூட வலியுறுத்தி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோா் டி.என்.பாளையத்தில் செவ்வாய்க்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு டி.என்.பாளையத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா். ஆனால் மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதி அளித்ததை தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.