செய்திகள் :

ஆஸி. பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ககிசோ ரபாடா

post image

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூன் 11) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இதையும் படிக்க: தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது: மிட்செல் ஸ்டார்க்

திட்டங்கள் உள்ளன

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக பேசிய தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது: போட்டி முற்றிலுமாக நடுநிலையான இடத்தில் நடைபெறுகிறது. அதனால், முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஆனால், உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக இந்த மாதிரியான சூழல்களில் விளையாடும்போது, அவர்களின் விக்கெட்டினை கைப்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதையும் படிக்க: ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஒவ்வொரு பேட்டருக்கு எதிராக பந்துவீசும்போதும், அவரது விக்கெட்டினை கைப்பற்ற வேண்டும் என்பதே பந்துவீச்சாளர் ஒருவரின் எண்ணமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை விளையாடிய போட்டிகளில் பேட்டர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டுள்ளதாக நினைக்கிறேன். எங்களிடம் ஒவ்வொரு பேட்டருக்கு எதிராகவும் தனித்தனி திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மிகுந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் ஆட்டத்தினை எளிமையாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவ... மேலும் பார்க்க

126 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை..! 820 ரன்கள் குவித்து சாதனை!

கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணி 820 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணியும் துர்ஹம் அணியும் கடந்... மேலும் பார்க்க

இந்திய அணி விளையாடாத டெஸ்ட் போட்டி: இந்திய ரசிகர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. லண்டனில் கடந்த ஜூன் 11-இல் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென... மேலும் பார்க்க

2-வது ஒருநாள் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; இங்கிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 290 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒர... மேலும் பார்க்க

‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் கோரினார் தோனி!

கிரிக்கெட் வீரர் தோனி ‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் உரிமை கோரினார். தோனி மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பெரும்பாலும் ‘கேப்டன் கூல்’ என்றே அழைத்... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து; ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட... மேலும் பார்க்க