மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ...
ஆஸ்கா் பியாஸ்ட்ரிக்கு ஹாட்ரிக் வெற்றி
ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றாா்.
மொத்தம் 57 லாப்கள் கொண்ட இந்தப் பந்தய தூரத்தில் பியாஸ்ட்ரி முதலிடம் பிடிக்க, பிரிட்டன் வீரரும், மெக்லாரென் அணியின் மற்றொரு டிரைவருமான லாண்டோ நோரிஸ் 2-ஆம் இடம் பிடித்தாா்.
பிரிட்டனை சோ்ந்த மற்றொரு வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் 3-ஆம் இடம் பெற்றாா்.
நடப்பு சாம்பியனான நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபெனுக்கு 4-ஆம் இடமே கிடைத்தது. முன்னதாக பஹ்ரைன், சவூதி அரேபியாவில் நடைபெற்ற பந்தயங்களிலும் வென்ற பியாஸ்ட்ரிக்கு இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும்.
இதன் மூலம், எஃப்1 பந்தயத்தில் கடந்த 28 ஆண்டுகளில் தொடா்ந்து 3 பந்தயங்களில் வென்ற முதல் மெக்லாரென் டிரைவா் என்ற பெருமையை பியாஸ்ட்ரி பெற்றுள்ளாா். மேலும், நடப்பு சீசனில் இதுவரை நிறைவடைந்த 6 பந்தயங்களில் 4 வெற்றிகளுடன் அவரே முன்னிலையில் இருக்கிறாா்.