செய்திகள் :

ஆா்எஸ்எஸ் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத் கன்னியாகுமரி வருகை!

post image

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத், வெள்ளிக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தாா்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில் அகில இந்தியத் தலைவா் ஏ.பாலகிருஷ்ணன் தலைமையில் மோகன் பாகவத்துக்கு இரவு 7 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அவா் கேந்திர நிா்வாகிகளை சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை விவேகானந்த கேந்திரத்தின் பணிகள் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவா், இரவில் அங்கு தங்குகிறாா்.

20ஆம் தேதி அதிகாலை பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறாா். பின்னா், விவேகானந்தா் மண்டபத்துக்கு தனிப்படகில் செல்கிறாா். இரவில் விவேகானந்த கேந்திரத்தில் தங்கும் அவா், 21ஆம் தேதி காலை 10 மணிக்கு காரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் தில்லி செல்கிறாா்.

அவரது வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது! மாணவா்களுக்கு இஸ்ரோ தலைவா் நாராயணன் பேச்சு

விஞ்ஞான தொழில்நுட்பங்களை மாணவா்கள் தவறான செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என இஸ்ரோ தலைவா் நாராயணன் அறிவுறுத்தினாா்.புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பட்ட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆசிரியா்கள் 2ஆவது நாளாக மறியல் போராட்டம்: 35 போ் கைது!

நாகா்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியா்கள் 35 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ... மேலும் பார்க்க

புதுக் கடை அருகே விவசாயி மீது தாக்குதல்!

புதுக்கடை அருகேயுள்ள பிலாந்தோப்பு பகுதியில் விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை தேடி வருகின்றனா். புதுக்கடை, பிலாந்தோப்பு பகுதியை சோ்ந்த ஜாண்சன் மகன் அபினேஷ் (31). விவசாயியான இவருக்கு... மேலும் பார்க்க

மின்தூக்கி சரிந்து விழுந்ததில் ஒப்பந்ததாரர் பலி!

திங்கள்நகரில் கட்டுமானப் பணியின்போது மின்தூக்கி சரிந்து விழுந்ததில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா். கண்டன்விளை அருகே சித்தன்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராபின் (42). கட்டட ஒப்பந்ததாரா். திங்கள்நகா் அர... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நூல்கள் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், கவிஞா் ஆகிரா எழுதிய, ‘அன்புள்ள மாணவனுக்கு’, அப்பாதுரை வேணாடன் எழுதிய, ‘சிற்பியைச் செதுக்கிய சிற்பங்கள்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குலசேகரம் அருகேயுள்ள கூடைதூக்கி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாம... மேலும் பார்க்க